சென்னையில் Wonderla ! இங்கதான் இந்தியாவிலேயே மிகப்பெரிய ரோலர் கோஸ்டர்

 
india's largest roller coaster

சென்னையில் ஏற்கனவே பல பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளன. இருந்தாலும் அதற்குரிய மவுஸ் குறையவில்லை. விடுமுறை நாட்களில் பொழுதுபோக்கு பூங்காவை நோக்கி மக்கள் படையெடுத்துவருகின்றனர்.

Roller Coaster Wonderla Hyderabad | Wonderla Amusement Park - YouTube

இந்நிலையில் வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவின் 5-வது பொழுதுபோக்கு பூங்கா, திருப்போரூர் அடுத்த இள்ளளூரில் 62 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுவருகிறது. மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து சுமார் ரூ.400 கோடி செலவில் அமையவுள்ள இந்த பூங்கா சென்னையில் இருந்து வெறும் 45 கிலோமீட்டர் தொலைவிலேயே உள்ளது. ஓஎம்ஆர் நெடுஞ்சாலையில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்துள்ளது.


இங்கு இந்தியாவிலேயே மிகப்பெரிய ரோலர் கோஸ்டர் அமைக்கும்பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. Bolliger & Mabillard எனும் கோஸ்டர் சென்னையில் வெற்றிகரமாக தரையிரங்கி உள்ள நிலையில் அவற்றை அசெம்பிள் செய்யும் பணி விரைவில் நடைபெற உள்ளதாக எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ள வொண்டர்லா நிறுவனம், அதற்கான செயற்கைக்கோள் புகைப்படத்தையும் இணைத்துள்ளது.