மகளிர் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்!

 
11

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கோவை வித்யா ராம்ராஜ் பங்குபெற்ற இந்திய அணி தங்கம் வென்றுள்ளது. இத்துடன் சேர்த்து இதுவரை 4 தங்கப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

வித்யா ராமராஜ் ஏற்கனவே, ஒரு தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றவர்.இப்பதக்கம் வாயிலாக, இந்தியாவிற்கு கிடைத்த தங்கம் எண்ணிக்கை 6 ஆகவும், மொத்த பதக்கங்களின் எண்ணிக்கை 52 ஆகவும் ( 21 வெள்ளி, 25 வெண்கலம்) அதிகரித்தது.

முதல்வர் விஜய் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:ஜப்பானில் நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகளம் பெண்கள் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்று, தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.அவரது மகத்தான சாதனையை பாராட்டும் வகையில், தமிழக அரசு சார்பில் ரூ.75 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் பெரும் மூன்றாவது பதக்கம் இது . தனது திறமை, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் இந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் வெற்றி, தமிழகத்தின் இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும். எதிர்காலத்திலும் அவர் மேலும் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

இவ்வாறு அந்த பதிவில் விஜய் கூறியுள்ளார்.