"இந்தியா என்பதும் பாரத் என்பதும் ஒன்றுதான்" - ப.சிதம்பரம் பேட்டி

 
P chidambaram

நாளைக்கே "பாரத்" என்று எதிர்க்கட்சி கூட்டணிக்கு பெயர் வைத்தால் பாரதம் என்ற பெயரையும் மோடி மாற்றி விடுவாரா ? என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 

pm modi

புதுக்கோட்டையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  பாரத நாடு பழம்பெரும் நாடு என்று சுப்பிரமணிய தமிழ்நாடு பாரதியார் பாடியுள்ளார்; பாரதம் என்பது நமக்கு விரோதம் அல்ல. அரசியல் சாசனத்தில் இந்தியாவும் இருக்கிறது பாரத்தும் இருக்கிறது. ஆனால் இந்தியா மீது இவ்வளவு காழ்ப்பு, வெறுப்பு திடீரென்று வந்ததுதான் வியப்பாக இருக்கிறது.

chidambaram

எதிர்க்கட்சி கூட்டணிக்கு "இந்தியா" என்று அதன் பெயரை சுருக்கி எழுதுவதால் இந்தியா மீது கோபம் வந்துவிட்டது . நாளைக்கே "பாரத்" என்று எதிர்க்கட்சி கூட்டணிக்கு பெயர் வைத்தால் பாரதம் என்ற பெயரையும் மோடி மாற்றி விடுவாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.