இந்தியா கூட்டணி பொதுக் கூட்டம் - நாளை முதல்வர் மும்பை பயணம்

 
cm stalin

இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க நாளை காலை விமானம் மூலம் மும்பை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

stalin

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக காங்கிரஸ்,  திரிணாமூல் காங்கிரஸ்,  தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, திமுக உள்ளிட்டு 25 மேற்பட்ட கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணி என்ற பெயரில் புதிய அமைப்பினை உருவாக்கின.

இந்த கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தொலைக்காட்சியின் தலைவரும் , பீகார் முதலமைச்சருமான நிதீஷ்குமார் விலகினார் . இதைத்தொடர்ந்து மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று மம்தா பானர்ஜி அறிவித்தார் . இதனால் இந்தியா கூட்டணிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது.  இருப்பினும் இந்தியா கூட்டணி தலைவர்கள் தொடர்ந்து பாட்னா, பெங்களூரு ,மும்பை, டெல்லி ஆகிய  நகரங்களில் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
stalin

இந்நிலையில்  இந்தியா கூட்டணி பொதுக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மும்பை செல்கிறார் .  நாளை காலை மும்பை செல்லும் முதல்வர் பொதுக் கூட்டம் முடிந்து நாளை இரவே சென்னை திரும்புகிறார்.