சுதந்திர தின கொண்டாட்ட ஒத்திகை- போக்குவரத்து மாற்றம்

 
traffic traffic

2025ம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான ஒத்திகையை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் சுதந்திர தின விழா ஒத்திகை- போக்குவரத்து மாற்றம்

சுதந்திர தினவிழா கொண்டாட்டம் வருகிற 15.08.2025 ஆம் தேதி செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, தலைமைசெயலகத்தில், கொண்டாடப்படவிருக்கிறது, இதனை முன்னிட்டு ஆகஸ்ட் 08, 11 மற்றும் 13 ஆகிய தினங்களில் ஒத்திகை நடைபெற உள்ளது. மேற்கண்ட 3 நாட்களுக்கு காலை 06.00 மணி முதல் காலை 10.00 மணி வரை கீழ்கண்ட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

1. உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவுச்சின்னம் வரை அமையப் பெற்றுள்ள காமராஜர் சாலை, போர் நினைவுச்சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வரை, அமையப்பெற்றுள்ள இராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலை ஆகிய சாலைகளில் அனைத்து வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

2. காமராஜார் சாலையிலிருந்து இராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் உழைப்பாளர் சிலையிலிருந்து வாலாஜா சாலை, அண்ணாசாலை, மன்ரோ சிலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை (NFS Road) வழியாக பாரிமுனையை சென்றடையலாம்.

கவனிச்சீங்களா.. சென்னையில் 3 நாளுக்கு இந்த ரோட்டில் நாட் அலோவுட்! டிராபிக்  போலீஸ் முக்கிய அறிவிப்பு | Independence day 2023 Parade: Traffic Changes in  Chennai City For ...

3. அண்ணா சாலையில் இருந்து பாரிஸ் கார்னர் நோக்கிச் செல்லும் வாகனங்கள் முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம், வடக்கு கோட்டை பக்க சாலை (NFS Road) வழியாக பாரிஸ் கார்னரை அடையலாம்.

4. ராஜாஜி சாலையில் இருந்து வரும் வாகனங்கள், தலைமைசெயலகம் வழியாக காமராஜர் சாலைக்கு செல்ல, பாரிஸ் கார்னர், வடக்கு கோட்டை பக்க சாலை (NFS Road), ராஜா அண்ணாமலை மன்றம், முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணாசாலை, மன்ரோ சிலை மற்றும் வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை அடையலாம்.

அனைத்து வாகன ஓட்டிகளும் தங்களது ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.