செல்வம் பெருக: அஷ்டலட்சுமி அருள் கிடைக்க வெள்ளிக்கிழமைகளில் இந்த விளக்கை ஏற்றுங்கள்!
செல்வங்கள் அனைத்தையும் மீண்டும் பெறுவதற்கும், வீட்டில் எப்போதும் குறைவு இல்லாமல் செல்வம் சேர்ந்து கொண்டே இருப்பதற்கும் நெல்லிக்காயில் தீபம் ஏற்றி வழிபடுவது மிக உயர்வான பலன்களை நமக்கு தரும். இந்த நெல்லிக்காய் தீபத்தை எந்த நாளில், எப்படி ஏற்றி வழிபட்டால் நமக்கு அஷ்டலட்சுமிகளின் அருள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
வீட்டில் நெல்லிக்காய் தீபம் ஏற்றுவது சிறந்த பரிகாரமாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த தீபத்தை வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி நாட்களில் அஷ்டலட்சுமி படத்திற்கு முன்பாக ஏற்றி, மகாலட்சுமி மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் இழந்த செல்வங்கள் யாவும் திரும்பக் கிடைக்கும். மேலும், குபேர சம்பத்தை அருளக்கூடிய இந்த நெல்லிக்காய் தீபத்தை வியாழக்கிழமைகளில் குபேரனுக்கு ஏற்றினால் சகல செல்வங்களும் வந்து சேரும்.
அஷ்டலட்சுமி படம் இருந்தால், அதனை வைத்து அதற்கு முன்பாக இரண்டு பெரிய நெல்லிக்காய்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வழிபாட்டிற்காக தேர்வு செய்யும் நெல்லிக்காயில் கருப்பு புள்ளிகள் ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நெல்லிக்காயின் மேல் மற்றும் அடி பாகத்தை மட்டும் கத்தியால் நறுக்கி, சமமாக இருக்கும் படி பார்த்துகக் கொள்ள வேண்டும். பிறகு மேலே உள்ள காம்பு பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் மெதுவாக எடுத்து, தீபம் ஏற்றுவதற்கு ஏதுவாக ஒரு குழி போல உருவாக்க வேண்டும்.
இவ்வாறு குழி செய்த நெல்லிக்காயில் நெய் அல்லது சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றி, மஞ்சளில் தோய்த்து நன்கு உலர வைத்த பஞ்சுத்திரியை இட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் கிழக்கு திசையை நோக்கி இருக்க வேண்டும். தீபம் ஏற்றிய பிறகு, உங்களுக்குத் தெரிந்த மகாலட்சுமி மந்திரங்கள் அல்லது ஸ்லோகங்களை உச்சரிக்கலாம். உங்களால் உச்சரிக்க முடியாவிட்டால், அவற்றை ஒலி வடிவமாக வீட்டில் ஒலிக்க விடலாம்.
அதன் பிறகு, அஷ்டலட்சுமிகளுக்கு நைவேத்தியமாக நெய் ஊற்றிய சர்க்கரைப் பொங்கல் படைப்பது விசேஷமானது. வெள்ளிக்கிழமைகளில் இவ்வாறு சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் படைத்து, மஞ்சள் திரி இட்டு, நெல்லிக்காய் தீபம் ஏற்றி மகாலட்சுமி மந்திரங்களை உச்சரித்தால், இழந்த செல்வங்கள் யாவும் திரும்பக் கிடைக்கும். நெல்லிக்காய் தீபம் குபேரனுக்கு ஏற்றலாம். நெல்லிக்காயை நைவேத்தியமாக படைத்து, குபேரனுக்கு நெல்லிக்காய் தீபம் ஏற்றி வழிபட்டால், சகல செல்வங்களும் உங்களைத் தேடி வரும்.
அஷ்ட லட்சுமியின் அனுக்கிரகத்தை நாம் பெற்று துன்பமில்லாத வாழ்வை பெறலாம்.
1. தன லட்சுமி:
யா தேவி ஸர்வ பூதேஷூ
புஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம
2. வித்யா லட்சுமி:
யா தேவி ஸர்வ பூதேஷூ
புத்தி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம
3. தான்ய லட்சுமி:
யா தேவி ஸர்வ பூதேஷூ
க்ஷுதா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம
4. வீர லட்சுமி:
யா தேவி ஸர்வ பூதேஷூ
த்ரூதிரு ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம
5. சௌபாக்ய லட்சுமி:
யா தேவி ஸர்வ பூதேஷூ
முஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம
6. சந்தான லட்சுமி:
யா தேவி ஸர்வ பூதேஷூ
மாத்ரூ ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம
7. காருண்ய லட்சுமி:
யா தேவி ஸர்வ பூதேஷூ
தயா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம
8. ஆதி லட்சுமி:
யா தேவி ஸர்வ பூதேஷூ
லக்ஷ்மீரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம||


