திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

 
tn

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதை பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை செயல்படுத்தப்படும் என்று ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, தற்போது 42 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 1.7.2023 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் 25.10.2023 அன்று உத்தரவிட்டார்.

stalin

இந்நிலையில் திருக்கோயில் பணியாளர்களுக்கு ஜூலை 1ம் தேதி முதல் அகவிலைப்படி 46%ஆக உயர்த்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே 42%ஆக அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்த நிலையில் 46%ஆக உயர்த்தியுள்ளது.

sekar babu

அனைத்து சார்நிலை அலுவலர்கள் தமிழக அரசின் அறிவிப்பை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பகுதிநேர, தினக்கூலி, தொகுப்பூதிய மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.