சென்னையில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை

 
raid

சென்னையில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

சென்னையில் பல்வேறு இடங்களில் மீண்டும் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.  தியாகராய நகர், கோபாலபுரம், கே.கே.நகர் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. வசுந்தரா டெக்ஸ்டைல்ஸ் நிறுவன உரிமையாளர் நீலகண்டன் வீடு, அவரது நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடைபெற்றது. கோபாலபுரத்தில் உள்ள ரியல் எஸ்டேட் தொழில் நடத்தும் வினோத் கிருஷ்ணா என்பவரது வீட்டிலும் ஐ.டி.சோதனை நடைபெற்றது.

RAID TTN

இந்த நிலையில், சென்னையில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் ஜவுளிக் கடை உரிமையாளர் மற்றும் தொழிலதிபர்கள் வீடுகளில் 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை தொடர்கிறது தியாகராய நகர், கோபாலபுரத்தில் பைனான்சியர்கள் வினோத் கிருஷ்ணா, பிரகாஷ் வீடுகளில் சோதனை நடந்து வருகிறது. வேப்பேரி, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் 2வது நாளாக சோதனை நடைபெறுகிறது.