அபிராமி மால் உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
Nov 3, 2023, 21:57 IST1699028835453

சென்னையில் உள்ள அபிராமி தியேட்டர் உரிமையாளர் ராமநாதன் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.
அபிராமி மால் உரிமையாளரும், தொழிலதிபருமான அபிராமி ராமநாதன் வீடு, அலுவலகம் மற்றும் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.
சென்னை போயஸ் கார்டன் கஸ்தூரி ரங்கன் எஸ்டேட் இரண்டாவது சாலையில் உள்ள பிரபல தொழிலதிபர் அபிராமி ராமநாதனுக்கு சொந்தமான அலுவலகத்தில் இன்று மாலை 4 மணி முதல் 12 பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் மயிலாப்பூர் ஜம்புலிங்கம் தெருவில் உள்ள அபிராமி ராமநாதனின் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. சென்னை மந்தவெளியில் உள்ள அபிராமி ராமநாதனின் மேலாளர் மோகன் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.