இரண்டாவது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை..

தமிழகம் முழுவதும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் வருமான வரித்துறைசோதனை இரண்டாவது நாளாக தொடரந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்தின் சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடு மற்றும் அலுவலகங்களிலும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் உள்பட நெருக்கமானவர்கள் வீடு, அலுவலகங்களிலும் தீவிர சோதனையை வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தினர். சோதனை குறித்து தகவல் அறிந்தது, அங்கு குவிந்த செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் , வருமான வரித்துறை அதிகாரிகளின் காரை சேதப்படுத்தினர். அத்துடன் அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
இந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று காலை தொடங்கிய வருமான வரித்துறை சோதனை, இரவு மூழுவதும் நீடித்து இன்று 2வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே நேற்று இந்நிலையில் சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவடைந்துள்ளது. அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு லேப்டாப், ஒரு ஐபேட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், வீட்டில் ரூ.30,000 வைக்கப்பட்டிருந்த லாக்கருக்கு அதிகாரிகள் சீல் வைத்து சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.