”இன்பநிதி படம் பொங்கலுக்கு கரெக்டா ரிலீஸ் ஆகும்; ஆனா எங்க படம் ஜனநாயகன் ரிலீஸ் ஆகாது”- ஆதவ் அர்ஜூனா

 
ஆதவ் அர்ஜூனா ஆதவ் அர்ஜூனா

தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக தலைமை பொறுப்பில் இருக்கின்ற அனைவரும் தலைவருடைய அனுமதியோடு சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள இருக்கிறோம் என தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.

தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பிரச்சார குழு ஆலோசனைக் கூட்டம் சென்னையை அடுத்துள்ள பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆலோசனைக்கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜூனா, “திமுக பாஜகவுடைய மிகப்பெரிய எதிரி என சொல்வார்கள். ஆனால் இன்பநிதி படம் பொங்கலுக்கு கரெக்டா ரிலீஸ் ஆகும். அதில் நடித்தவர்கள் எல்லாம் டெல்லிக்கு சென்று பொங்கல் கொண்டாடுவார்கள். ஆனால் எங்க படம் ஜனநாயகன் ரிலீஸ் ஆகாது. தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக தலைமை பொறுப்பில் இருக்கின்ற அனைவரும் தலைவருடைய அனுமதியோடு சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள இருக்கிறோம். சென்னை இருக்கின்ற 14 தொகுதியிலும் மூன்று நாட்கள் 26 ஆம் தேதியிலிருந்து துவங்கி அந்த பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம்.

அதற்கு பிறகு திருவள்ளுர் மாவட்டம், அதே நாளில் ராணிப்பேட்டை, வேலூர்,  ஆம்பூர், இரண்டாவது நாள் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மூன்றாவது நாள் சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர், நான்காவது நாள் ஈரோடு, மேட்டுப்பாளையம், கோவை, ஐந்தாவது நாள் திண்டுக்கல்,  தேனி, விருதுநகர், தென்காசி, ஆறாவது நாள் திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, ராமநாதபுரம்,ஏழாவது நாள் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, எட்டாவது நாள் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ஒன்பதாவது நாள் அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர், பத்தாவது நாள் புதுச்சேரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் செல்லவுள்ளோம். 
ஒவ்வொரு பகுதியிலும் இருக்கின்ற செயல் வீரர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் பேரூராட்சி பொறுப்பாளர்கள் மாவட்ட கழக செயலாளருடைய ஒருங்கிணைப்போடு அந்த பணிகள் நடைபெற இருக்கிறது” என்றார்.