‘உதயமான இன்பநிதி பாசறை’ எதிர்காலமே என வாழ்த்தி திமுகவினர் போஸ்டர்

 
‘உதயமான இன்பநிதி பாசறை’ எதிர்காலமே என வாழ்த்தி திமுகவினர் போஸ்டர்

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநதி புகைப்படத்துடன் இன்பநிதி பாசறை என்ற வாசகத்துடன் வருகின்ற செப்டம்பர் 24ம் தேதி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று புதுக்கோட்டை நகரபகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

‘உதயமான இன்பநிதி பாசறை’ எதிர்காலமே என வாழ்த்தி திமுகவினர் போஸ்டர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக வந்த பிறகு பின்னர் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது பலரிடம் வரவேற்பு பெற்றாலும், எதிர்க்கட்சியினர் சிலர் விமர்சனங்களும் செய்து வந்தனர். இந்நிலையில் தான் அடுத்த கட்டமாக உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதியும் அரசியலுக்கு வருவார், அவரையும் திமுகவினர் ஆதரிப்பாளர்களா என்று எழுந்த விமர்சனத்திற்கு பல மூத்த அமைச்சர்களும் கூட இன்பநதி அரசியலுக்கு வந்தாலும் அவரையும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்று தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநதி புகைப்படத்துடன் இன்பநிதி பாசறை என்ற வாசகத்துடன் வருகின்ற செப்டம்பர் 24ம் தேதி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றும் இன்பநதியை எதிர்காலமே என்று குறிப்பிட்டும்  மண்ணை பிளக்காமல் விதைகள் முளைப்பதில்லை போராட்ட களம் இன்றி வெற்றிகள் கிடைப்பதில்லை என்ற வாசகத்துடன் புதுக்கோட்டை நகரபகுதி முழுவதும் திமுகவை சேர்ந்த இருவர் புகைப்படத்துடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.