பெரியார் அறிவுலகம் திறப்பு விழா.. மரக்கன்று நட்டு வைத்த முதலமைச்சர் விஜய்..!

 
1

கோவையில் பெரியார் அறிவுலகம் நூலகத்தை திறந்து வைத்த பின் மரக்கன்று நட்டு வைத்த முதலமைச்சர் விஜய்

கோவையில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் நூலகத்தை இன்று (அக்.16) திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், தொடர்ந்து அங்கு மரக்கன்று நட்டு வைத்தார். அறிவுலகம் திறப்பு விழாவில் பங்கேற்ற அவர், நூலகத்தைத் திறந்து வைத்து அதன் பயன்பாட்டைத் தொடங்கி வைத்தார். இதையடுத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் மரக்கன்றை நட்டு வைத்து, தண்ணீர் ஊற்றினார். பெரியார் அறிவுலகம் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அறிவியல் தகவல்களை அறிந்துகொள்ள உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.