சட்டமன்ற தேர்தலில் அமைச்சர்கள் எந்த தொகுதியில் போட்டி?

 

சட்டமன்ற தேர்தலில்  அமைச்சர்கள் எந்த தொகுதியில் போட்டி?

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம், கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்த பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த சூழலில் ஜெ.பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக இன்று முதல் தேர்தலில் போட்டியிட விருப்பமனுவை விநியோகம் செய்து வருகிறது. இன்று முதல் மார்ச் 5 ஆம் தேதிவரை மனுவை பெற்று கொள்ளலாம். இதற்கான கட்டணம் 15 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலில்  அமைச்சர்கள் எந்த தொகுதியில் போட்டி?

சென்னை – ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று முதல் விருப்ப மனு விநியோகிக்கத்தை கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தொடங்கி வைத்தனர். எடப்பாடியில் முதல்வர் பழனிசாமியும், போடிநாயக்கனூரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மீண்டும் போட்டியிட விருப்பமனு அளிக்கவுள்ளனர்

சட்டமன்ற தேர்தலில்  அமைச்சர்கள் எந்த தொகுதியில் போட்டி?

இந்நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல் தொகுதியிலும் , ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையனும் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்கின்றனர். அதேபோல் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அமைச்சர் எஸ் .பி. வேலுமணி விருப்ப மனு அளித்தார். அத்துடன் அமைச்சர் தங்கமணி குமாரப்பாளையத்தில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்கிறார்.