எந்தெந்த தொகுதிகளில் மதிமுக போட்டி..? லிஸ்ட் இதோ!
Mar 28, 2026, 15:53 IST1774693432697
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், தே.மு.தி.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது.
அதன்படி திமுக 164, காங்கிரஸ் - 28, தே.மு.தி.க. 10, விடுதலை சிறுத்தைகள் கட்சி -8, இந்திய கம்யூனிஸ்டு கட்சி -5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி - 5, ம.தி.மு.க. - 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, மனிதநேய மக்கள் கட்சி 2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 2, மனிதநேய ஜனநாயக கட்சி 1, எஸ்.டி.பி.ஐ. -1, முக்குலத்தோர் புலிப்படை 1, தமிழர் தேசம் கட்சி 1 என தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ம.தி.மு.க.
(உதயசூரியன் -3, தனிச் சின்னம் -1)
- மொடக்குறிச்சி
- மதுரை தெற்கு
- கடையநல்லூர்
- சீர்காழி (தனி) – தனிச் சின்னம், ஆகிய தொகுதியில் போட்டியிடுவதாக இன்று (மார்ச் 28) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள்து.

