தேர்தல் வாக்குறுதியில் டாஸ்மாக் எண்ணிக்கை குறைப்பேன் என்று கூறினார்கள்... செய்தார்களா..? திலகபாமா காட்டம்
கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக பொருளாளர் திலகபாமா கூறியதாவது, "தமிழக முழுவதும் எல்லா இடங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அரங்கேறியுள்ளது முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார் தவறு நடந்தால் எனது கை இரும்பு கையாக செயல்படும் என்று ஆனால் தற்பொழுது அந்த கை எங்கே போனது என்று தெரியவில்லை என்ன விமர்சனம் செய்தார்.
தொடர்ச்சியாக அண்ணா பல்கலைக்கழகம்,கடலூர்,கோவை போன்ற பகுதிகளில் பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறி வருவதாகவும் போதைப் பழக்கத்தினால் இதுபோல குற்றங்கள் நடைபெற்று வருவதாகவும் முதல்வர் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை" என கேள்வி எழுப்பினர். தீபாவளிக்கு மது விற்பனை செய்வதற்கு தமிழக அரசு டார்கெட் வைத்துள்ளது.அதேபோல சட்ட ஒழுங்கை சீர் செய்ய டார்கெட் வைத்துள்ளார்கள் என கேள்வி எழுப்பினார்.சம்பவம் நடந்த பகுதியில் மதுபான கடையை நாம் தமிழர் கட்சியினர் அடித்து உடைத்து விட்டனர் இதுவே பொதுமக்கள் செய்தால் மதுபான கடைக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்கிறார்கள். கரூர் சம்பவத்தில் சாரி கேட்டது போல அந்த பெண்ணை அழைத்து முதல்வர் சாரி கேட்பாரா?? குற்றவாளிகளை குடி நோயாளியாக மாற்றிய முதல்வர் ஸ்டாலினை தான் சிறையில் அடைக்க வேண்டும் என்று காட்டமாக விமர்சனம் செய்தார்.
அனைத்து இடங்களிலும் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது எனவும் இன்று காலை கூட பயணம் செய்து வந்த வழியில் காலை 6 மணிக்கே மது அருந்திவிட்டு சாலையில் நின்று கொண்டிருக்கிறார்கள்.
இது காவல்துறைக்கு தெரியாமல் இருக்கிறதா முதலமைச்சருக்கு தெரியாமல் இருக்கிறதா என கேள்வி எழுப்பினார். தமிழக அரசு கட்டுப்பாட்டில் சட்ட ஒழுங்கு இல்லை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை கேட்டால் பெரியார் மண் என்று கூறுகிறார்கள் ஆனால் பெண்கள் யாரும் சுதந்திரமாக நடமாட முடியவில்லை என விமர்சனம் செய்தார். தமிழக அரசு எல்லாப் பகுதிகளும் போதைப் பொருட்களை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.தேர்தல் வாக்குறுதியில் டாஸ்மாக் எண்ணிக்கை குறைப்பேன் என்று கூறினார்கள் ஆனால் தற்பொழுது வரை நிறைவேற்றவில்லை. இதற்கு பாட்டாளி மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என தெரிவித்தார்.

