நாளை நடைபெறுகிறது 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' எனும் திட்டம்

 
tn

'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' எனும் திட்டம் சென்னையை விடுத்து மற்ற மாவட்டங்களில் நாளை நடைபெறுகிறது.

tn

 அரசினால் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் மக்களைச் சரியாகச் சென்று அடைகின்றனவா? பல்வேறு துறைகளால் வழங்கப்படுகின்ற சேவைகள் மக்களுக்கு முறையாகக் கிடைக்கின்றனவா என்பதை முதல்வரே களத்துக்கு நேரடியாகச் சென்று, ஆய்வில் ஈடுபட்டு, அரசு இயந்திரத்தை முடுக்கி விட்டு, கள அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தையும் நடத்தி உரிய அறிவுரைகளை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் தான் களத்தில் முதல்வர் திட்டம். "மக்களிடம் செல், அவர்களுடன் வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள், அவர்களை நேசி, அவர்களுக்குச் சேவை செய்" என்று சொன்ன அண்ணாவின் கனவை நனவாக்கும் திட்டம் இது என்று தமிழ்நாடு அரசு தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. 

govt

இந்நிலையில் மக்களின் குறைகளுக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட 'உங்களைத் தேடி உங்கள் ஊரில் எனும் திட்டம்' சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நாளை அமலுக்கு வருகிறது. மாவட்டத்தின் ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் நாள் முழுவதும் ஆட்சியர்கள் தங்கி பொதுமக்களின் கோரிக்கைகளை பெறும் இந்த முகாம் மாதம் தோறும் 4வது புதன்கிழமை நடைபெற உள்ளது.