புதுச்சேரியில் 3 மாடி புதிய வீடு சீட்டுகட்டு போல் இடிந்து விழுந்து விபத்து

 
கட்டிடம்

புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட உப்பனாரு வாய்க்காலில் அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

புதுச்சேரியில் உப்பனாறு கால்வாய் அருகே சாவித்திரி என்பவர் புதிதாக கட்டிவந்த 3 மாடி கட்டிடம் அடியோடு சரிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உப்பனாரு வாய்க்கால் தூர்வாரும் பணியின் போது அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதிதாக கட்டப்பட்ட 3 அடுக்கு மாடி வீட்டுக்கு புதுமனை புகுவிழா நடைபெற இருந்த நிலையில் வீடு இடிந்து விழுந்ததால் வீட்டின் உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.


 வரும் 26 ம் தேதி புதுமனைப் புகுவிழா நடைபெற இருந்த நிலையில் விபத்து. நல்வாய்ப்பாக வீட்டில் யாரும் இல்லாததால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.