சென்னையில் அ.தி.மு.க. சார்பில் திரு.வி.க. நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் போட்டி

 
ழ்

அதிமுக மூன்றாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி. அதில் திருவிக நகர் (தனி) தொகுதியில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் போட்டியிடுகிறார்.

திரு.வி.க நகரில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி போட்டி என அ.தி.மு.க அறிவித்த நிலையில், எடப்பாடி பழனிசாமியை சந்தித்த அவர், நன்றி தெரிவித்தார்.  முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், “திரு.வி.க.நகர் தொகுதியில் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெறுவோம். எடப்பாடி பழனிசாமி, ஆம்ஸ்ட்ராங் மரணத்திற்காக சட்டசபையிலும் குரல் கொடுத்தார். வரும் தேர்தலில் NDA கூட்டணி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். எனக்கு இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். எனது கணவர் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும். ஜெய் பீம்” என்றார்.