மேலும் ஒரு வழக்கில் சவுக்கு சங்கர் கைது

 
rn

யூடியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவல் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக கடந்த 4ம் தேதி தேனியில் கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  இதை தொடர்ந்து பெண் பத்திரிகையாளர் அளித்த புகாரையடுத்து  சவுக்கு சங்கர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

tn

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பது சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்ற பிரிவு மற்றும் சைபர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  சவுக்கு சங்கர் தரப்பில்  ஜாமின் கோரிய மனு மீதான  விசாரணை வருகிற 10ம் தேதி நடைபெற உள்ளது . ஏற்கனவே தேனி, சேலம், திருச்சி மாவட்ட காவல் நிலையங்களிலும் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

tn

இந்நிலையில் திருச்சி காவல்துறையினர் பதிவு செய்திருந்த வழக்கில் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.  திருச்சியில் இருந்து கோவை மத்திய சிறைக்கு சென்ற போலீசார் திருச்சி வழக்கில் கைது செய்வதற்காக உத்தரவினை சவுக்கு சங்கரிடம் வழங்கினர்.