பாஜகவுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தும் திமுக- சட்டப்பேரவையில் நாளை முக்கிய தீர்மானம்!

 
MKstalin

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை (ஏப்.15) மாநில சுயாட்சி தொடர்பாக  தீர்மானம் கொண்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் .

cm mk stalin

மாநில உரிமைகளை நிலைநாட்டக்கூடிய வகையில் விரைவில் புதிய அறிவிப்பை வெளியிடுவதாக கடந்த 25ஆம் தேதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும் மாநில சுயாட்சியை உறுதி செய்து, மாநில உரிமைகளை நிலைநாட்டினால்தான் தமிழினத்தை உயர்த்த முடியும் என முதல்வர் கூறியிருந்தார்.

இந்நிலையில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்க வலியுறுத்தும் வகையில், மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானத்தை நாளை சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்யவுள்ளார். மாநில உரிமை மற்றும் அதிகாரத்தை ஒன்றிய அரசு பறித்துவரும் நிலையில், மாநில சுயாட்சி தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.