ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் கவனத்துக்கு!

 
assembly

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் ஓய்வூதிய பலன்கள் தொடர்பான முன்மொழிவுகள்,  இனி வரும் காலங்களில் களஞ்சியம் ஆப் மூலமே செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஓய்வூதியர்களின் உதவித்தொகையை உயர்த்த ஒப்புதல் அளித்த அரசு! - Government  approves increase in pension benefits!


01.04.2003 பிறகு தமிழ்நாடு அரசு பணியில் சேர்ந்த அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்யப்பட்ட தொகை பெறுவதற்கு தபால் (Offline) மூலம் ப.ஓ.தி முன்மொழிவுகள் இவ்வலுவலகத்திற்கு பெறப்பட்டு. வந்த நிலையில் இனிவரும் காலங்களில் களஞ்சியம் இணையதளத்தின் வாயிலாக ப.ஓ.தி முன்மொழிவுகள் அனுப்புவதற்கு ஏதுவாக வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, தங்களின் கட்டுபாட்டின் கீழ் வரும் அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலகத்திலிருந்து அனுப்பபட வேண்டிய அனைத்து ப.ஓதி முன்மொழிவுகளும் களஞ்சியம் இணையதளத்தின் வாயிலாக அனுப்புமாறு அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களையும் அறிவுறுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது.

மேலும் களஞ்சியம் இணையதளத்தில் வாயிலாக அனுப்பப்பட்ட ப.ஓ.தி முன்மொழிவுகளை தபால் வழியாகவும் அனுப்புமாறு அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து சம்பள கணக்கு அலுவலர்/ மாவட்ட கருவூல அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.