சென்னையில் ரயிலில் பயணிப்போருக்கு முக்கிய அறிவிப்பு! எழும்பூர் வராதீங்க... தாம்பரம் போங்க!
எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்து வரும் மேம்பாட்டு பணி காரணமாக, எட்டு விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்குவது வரும் 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், ★ தஞ்சாவூர் – எழும்பூர் உழவன் விரைவு ரயில், கேரளா மாநிலம் கொல்லம் – எழும்பூர் அனந்தபுரி, ராமேஸ்வரம் – எழும்பூர் சேது விரைவு ரயில், ராமேஸ்வரம் – எழும்பூர் விரைவு ரயில் இன்று முதல் டிசம்பர் 4 வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்
★ எழும்பூர் – தஞ்சாவூர் உழவன் விரைவு ரயில், எழும்பூர் – கொல்லம் அனந்தபுரி, எழும்பூர் – ராமேஸ்வரம் சேது விரைவு ரயில், எழும்பூர் – ராமேஸ்வரம் விரைவு ரயில் டிசம்பர் 1 முதல் 5ம் தேதி வரை தாம்பரத்தில் இயக்கப்படும்
★ எழும்பூர் – மும்பை சி.எஸ்.டி., விரைவு ரயில் நாளை முதல் 5ம் தேதி வரை சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும்
மாற்றுப்பாதையில் இயக்கம்:
★ குஜராத் மாநிலம் ஆமதாபாத் – திருச்சி விரைவு ரயில் வரும் 4ம் தேதி, அரக்கோணம், காட்பாடி, வேலுார், விழுப்புரம் என மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இதனால், அரக்கோணம், பெரம்பூர், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


