முக்கிய அறிவிப்பு..! இனி ஆண்டுக்கு 2 முறை மட்டுமே சிஏ இறுதித் தேர்வு.!!
கடந்த ஆண்டு சி.ஏ. எனப்படும் பட்டயக் கணக்காளர் படிப்புக்கான இறுதித்தேர்வு ஆண்டுக்கு 3 முறை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.அதாவது, ஜனவரி, மே, செப்டம்பர் ஆகிய 3 மாதங்களில் சிஏ இறுதித்தேர்வு நடத்தப்படும் என இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் தெரிவித்திருந்தது.
ஆனால், ஆண்டுக்கு 3 முறை இறுதித்தேர்வு நடத்தப்படுவதால், தேர்வர்களுக்கு அதிக அழுத்தம் ஏற்படுவதாகவும், முறையாக தேர்வுக்கு தயாராக முடியவில்லை என்றும் கூறப்பட்டது.
இதனை கருத்தில் கொண்டு சிஏ இறுதித் தேர்வு இனி ஆண்டுக்கு 2 முறை மட்டுமே நடத்தப்படும் என இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆண்டுதோறும் மே மற்றும் நவம்பர் மாதம் மட்டுமே சிஏ இறுதித் தேர்வு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
அதே சமயம், ஆண்டுதோறும் மூன்று முறை நடத்தப்படும் சிஏ முதல்நிலை மற்றும் இடைநிலைத் தேர்வுகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனிடையே, நடப்பாண்டு சிஏ இடைநிலைத் தேர்வு மே 3-ஆம் தேதிக்குப் பதிலாக, 5-ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



