தமிழக பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள்!

தமிழக பட்ஜெட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.26,000 கோடி ஒதுக்கீடு செயப்பட்டுள்ளது.
2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படது. காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் பட்ஜெட்டை நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து குருநானக் கல்லூரி வரை 3 கி.மீ தூரத்திற்கு புதிய மேம்பாலம் அமைக்கப்படும். திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை தாம்பரத்தில் நிறுவப்படும். அடையாறு நிதி சீரமைப்பு பணியில் சைதாப்பேட்டை முதல் திரு.வி.க பாலம் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
சென்னை மாநகரப்பகுதியில் முதன்மை சுற்றுக்குழாய் திட்டம் செயல்படுத்தப்படும். இதன்மூலம் ஒரு பகுதியில் உபரியாக உள்ள தண்ணீரை, மற்றொரு பகுதிக்கு கொண்டு செல்லப்படும். புதிதாக 7 மழைநீர் உறிஞ்சு பல்லுயிர் பூங்கா அமைக்கப்படும். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிப் பகுதியில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என கூறினார்.