இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் - போலீஸ் பாதுகாப்பு

 
tn

ராமநாதபுரத்தில் இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 9ம் தேதி தொடங்கி, அக்டோபர் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார். இதனால் வெளிமாவட்ட வாடகை வாகனங்கள் ராமநாதபுரத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று  டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN

144 தடை உத்தரவு காலத்தில் பொதுக் கூட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள் நடத்தவும், பொது இடங்களில் 5 பேர் மற்றும் அதற்கு மேற்பட்டோர் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் சொந்த வாகனங்களில் வருவோர் அந்தந்த டிஎஸ்பி அலுவலகங்களின் வாகன அனுமதி சீட்டு பெற்றுவர வேண்டும். வாகனங்களில் ஒலிபெருக்கிகள் அமைத்துக் கொண்டோ, பேனர்கள் கட்டிக்கொண்டோ வரக்கூடாது. வழிகளில் பட்டாசுகள் வெடிக்கவோ மேற்கூரைகளில் பயணிக்கவோ அனுமதியில்லை என்று மாவட்ட  ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

144

இந்நிலையில் இம்மானுவேல் சேகரனாரின் 66வது நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு 6,000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.