இம்மானுவேல் சேகரன் 66-ஆவது நினைவு நாள் - ஈபிஎஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

 
ep

சுதந்திரப் போராட்டத் தியாகி இம்மானுவேல் சேகரன்  66-ஆவது நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில், அதிமுக  சார்பில் நினைவு அஞ்சலி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய ராணுவத்தில் பணியாற்றியவரும், “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் கலந்துகொண்டு சிறை சென்றவரும், தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடி, ஓர் அரசியல் சக்தியாக, அவர்கள் அணி திரள்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவருமான அரசியல் தலைவர், சுதந்திரப் போராட்டத் தியாகி திரு. இம்மானுவேல் சேகரன் அவர்களின் 66-ஆவது நினைவு 56TI 6T 11.9.2023 திங்கட் கிழமை காலை 10 மணியளவில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில், 

tn

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்,
திரு. R.B. உதயகுமார், M.L.A., அவர்கள் கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர்
மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர்
முன்னாள் அமைச்சர்

திருமதி கீர்த்திகா முனியசாமி அவர்கள்
கழக மகளிர் அணி இணைச் செயலாளர்

திரு. என். சின்னத்துரை அவர்கள்
கழக அமைப்புச் செயலாளர்’
கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர்

திருமதி V.M. ராஜலெட்சுமி அவர்கள்
கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்
கழக மகளிர் அணி துணைச் செயலாளர், முன்னாள் அமைச்சர்

திரு. M.A. முனியசாமி அவர்கள்
ராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர்

திரு. அ. அன்வர்ராஜா அவர்கள்
முன்னாள் அமைச்சர்

டாக்டர் M. மணிகண்டன் அவர்கள்
கழக மருத்துவ அணி துணைச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
திரு. M.S. நிறைகுளத்தான், Ex. M.P., அவர்கள் முன்னாள் கழக அமைப்புச் செயலாளர்
திரு. N. சதன் பிரபாகர், Ex. M.L.A., அவர்கள் கழக புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர் டாக்டர் S. முத்தையா, Ex. M.L.A., அவர்கள்
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்
உள்ளிட்டோர் நினைவு அஞ்சலி செலுத்துவார்கள்.

admk

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, ராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. M.A. முனியசாமி அவர்கள் சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.திரு.இம்மானுவேல் சேகரன் அவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் இந்நிகழ்ச்சியில், ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.என்று தெரிவித்துள்ளார்.