இம்மானுவேல் சேகரன் நினைவுதினம் - ஓபிஎஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

 
op

இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரரும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடியவருமான இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக அவரது  நினைவிடத்தில்  வருகிற 11ஆம் தேதி  அஞ்சலி செலுத்தப்படும் என்று ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.

tn

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இளம் வயதிலேயே இந்தியச் சுதந்திரத்திற்கு குரல் கொடுத்தவரும், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கெடுத்து சிறை சென்றவரும், பன்மொழிப் புலவராக விளங்கியவரும், அடக்குமுறை சமூகத்தின் அவலம் நீங்கிட வேண்டுமென்ற லட்சியத்துடன் பாடுபட்டவரும், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக தனது இராணுவப் பணியை துறந்தவரும், தாழ்த்தப்பட்ட சமூகத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவருமான திரு. இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாளான 11-09-2022 (ஞாயிற்றுக் கிழமை) அன்று காலை 10-00 மணிக்கு இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது நினைவிடத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்

திரு. R. தர்மர், M.P., அவர்கள் இராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர்

திரு. R. கோபாலகிருஷ்ண ன், Ex. M.P., அவர்கள் கழக வழிகாட்டு குழு உறுப்பினர், மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்

திரு. A. சுப்புரத்தினம், Ex. M.L.A., அவர்கள் மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர்

admk

திரு. A மனோகரன், Ex. M.L.A., அவர்கள் மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர்

திரு. G.அன்பழகன், Ex. M.L.A., அவர்கள் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் திரு. K.R. அசோகன் அவர்கள் சிவங்கை மாவட்டக் கழகச் செயலாளர்

திருமதி J. ஸ்வர்ணா அவர்கள் தலைமை செயற்குழு உறுப்பினர் தென்காசி வடக்கு மாவட்டக் கழக துணைச் செயலாளர் தென்காசி வடக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்

உள்ளிட்டோர் நினைவு அஞ்சலி செலுத்துவார்கள்.

tn

மேற்படி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. ஆர். தர்மர், M.P. அவர்கள் மேற்கொள்வார். மேற்படி நிகழ்ச்சியில், சிவகங்கை, விருதுநகர் மத்திய, விருதுநகர் கிழக்கு, விருதுநகர் மேற்கு, திருநெல்வேலி மாநகர், திருநெல்வேலி புறநகர், தென்காசி தெற்கு, தென்காசி வடக்கு ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு திரு. இம்மானுவேல் சேகரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.