இமானுவேல் சேகரனாரின் 66-ஆம் ஆண்டு நினைவு நாள்: விடுதலை உணர்வையும், தியாகத்தையும் போற்றுவோம்!!

 
anbumani

இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளில் அவரது விடுதலை உணர்வையும், தியாகத்தையும் நாம் அனைவரும் போற்ற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், விடுதலைப்  போராட்ட வீரர் இமானுவேல் சேகரனாரின் 66-ஆம் ஆண்டு நினைவு நாள்:  அவரது விடுதலை உணர்வையும், தியாகத்தையும் போற்றுவோம்!! 

tn

தீண்டாமைக்கு எதிராக போராடிய தியாகி இமானுவேல் சேகரனாரின் 66-ஆம் ஆண்டு நினைவு நாள்  இன்று கடைபிடிக்கப்படுகிறது. சமூக விடுதலைக்காகவும், தீண்டாமைக்கு எதிராகவும் அவர் நடத்திய போராட்டங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.


இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளில் அவரது விடுதலை உணர்வையும், தியாகத்தையும் நாம் அனைவரும் போற்ற வேண்டும். அதுமட்டுமின்றி, அவர் எந்த இலக்கை அடைய பாடுபட்டாரோ, அந்த இலக்கை அடைவதற்காக உழைக்க அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும்! என்று குறிப்பிட்டுள்ளார்.