இம்மானுவேல் சேகரன் சேவைகளையும், தியாகங்களையும், நினைவு கூறுவோம் - ஜி.கே. வாசன்

 
gk

தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் தியாகங்களை நினைவு கூறுவோம் என்று  ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தியாகி இம்மானுவேல்சேகரன் அவர்களின் 66-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று. 

btt
தியாகி இம்மானுவேல் அவர்கள் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடியவர். இந்திய இராணுவத்தில் பணியாற்றி வந்த இம்மானுவேல் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை மீட்டெடுக்க இராணுவத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு, "ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்" என்ற அமைப்பை துவங்கி, தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டவர்.

GK Vasan

இந்திய விடுதலை போரில் ஈடுபட்டு சிறை சென்றவர். நாட்டிற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் பாடுபட்ட தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவு தினம் இன்று. இந்நாளில் அவர்களின் சேவைகளையும், தியாகங்களையும், நினைவு கூறுவோம்." என்று குறிப்பிட்டுள்ளார்.