தம்பி என்ன மன்னிச்சிடுடா..! உருக்கமாக கடிதம் எழுதி வைத்து புதுமணப்பெண் தற்கொலை!

 
11

இந்த வருடம் ராக்கி கட்டிவிட முடியவில்லை. ஜாக்கிரதையாக இரு தம்பி’ என்று உருக்கமாக கடிதம் எழுதி வைத்து விட்டு புதுமணப்பெண் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்து காவல்துறையினரின் கூற்றுப்படி, தற்கொலைச் செய்துக் கொண்ட ஸ்ரீவித்யாவின் தற்கொலைக் குறிப்பில், அவரது கணவர் ராம்பாபு மது போதையில் தன்னை உடல் ரீதியாகத் தொடர்ந்து தாக்கி வந்ததாகவும், அடிக்கடி பணம் கேட்டதாகவும், தொடர்ந்து அவமானப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

திருமணம் கல்யாணம் கும்பம்

இறந்த ஸ்ரீவித்யா, வுய்யூரு நகரில் தனியார் கல்லூரி ஒன்றில் முதுகலைப் பட்டதாரியாகப் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மாதம் தான் கலுவாபமுலாவைச் சேர்ந்த கிராம சர்வேயர் ராம்பாபுவை மணந்தார்.

கடந்த ஆக.3ம் தேதியன்று இரவு தனது வீட்டில் ஸ்ரீவித்யா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் துயரச் சம்பவத்தில், தனது தம்பிக்கு ஒரு துயரமான தற்கொலைக் குறிப்பு ஒன்றை எழுதி வைத்துவிட்டுச் சென்றார். அதில், இந்த ஆண்டு ராக்கி கட்ட முடியாதது குறித்து வருத்தத்தை வெளிப்படுத்திய அவர், தனது கணவர் மற்றும் மாமியார் குடும்பத்தினரால் தான் சந்தித்த கொடுமைகளையும் விவரித்துள்ளார். 

"அவர் என் தலையை படுக்கையில் மோதி என் முதுகில் குத்தினார்" என்று தற்கொலைக் குறிப்பில் எழுதப்பட்டுள்ளது. திருமணமான ஒரு மாதத்திற்குள் துஷ்பிரயோகம் தொடங்கியதாகவும், தனது கணவரின் குடும்ப உறுப்பினர்கள் துன்புறுத்தலுக்கு உடந்தையாக இருந்ததாகவும் தனது தற்கொலைக் குறிப்பில் தெரிவித்துள்ளார். 

திருமணம்

கடிதத்தின் மற்றொரு பகுதியில், "அவர் என்னை மற்றவர்கள் முன் அவமானப்படுத்தினார், என்னை தண்டச்சோறு என்று அழைத்தார். குடிபோதையில் என்னை அடிக்கடி அடித்து பணம் கேட்டார். தயவுசெய்து நீதி நிலைநாட்டுங்கள். அவர்களை விடாதீர்கள்" என்று எழுதி உள்ளார். 

தனது துன்பத்திற்கு காரணமானவர்களை விட்டுவிடக் கூடாது என்று ஸ்ரீவித்யா அதிகாரிகளையும் வலியுறுத்தி கடிதத்தில் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், ஸ்ரீவித்யாவின் மரணத்தை சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து ராம்பாபு மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.