வெறுத்துப் போச்சு சார்...! ஓலா பைக்கை தீ வைத்து கொளுத்திய உரிமையாளர்..!!

 
Q Q

ஓலா ஷோரூம் முன் பேட்டரி பைக்கை தீவைத்து கொளுத்திய நபரால் பரபரப்பு நிலவியது. 

குஜராத் மாநிலத்தின் பாலன்பூரில் உள்ள ஓலா ஷோரூம் முன்புறம், வாடிக்கையாளர் தனது ஓலா ஸ்கூட்டரை கெரோசின் ஊற்றி தீ வைத்தார்.

இதற்கு காரணம், முந்தைய நாள் அவர் தனது மனைவி மற்றும் ஐந்து வயது மகனுடன் பட்டாசு வாங்கச் சென்றபோது, ஸ்கூட்டரின் ஸ்டீயரிங் சட்டத்தில் திடீரென பிரிந்து போனது.

அதிர்ஷ்டவசமாக, ஹைவேயில் இல்லாததால் மெதுவான வேகத்தில் சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. வாடிக்கையாளர் ஷோரூம் நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கோபத்தில் இந்த அபாயகரமான செயலைச் செய்தார்.

இந்த சம்பவத்தின் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி, ஓலா நிறுவனத்தின் சேவை தரம் குறித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளரின் தொடர் புகார்களைப் புறக்கணித்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.