சட்டவிரோத மது விற்பனை - திருவாரூரில் 105 பேர் கைது

 
arrest

திருவாரூரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

tn

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனைக்கு எதிராக சிறப்பு அதிரடி வேட்டை நடத்தப்பட்ட நிலையில் 101 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த மூன்று தினங்களாக கள்ளச்சாராயம் சட்டவிரோத மது விற்பனைக்கு எதிராக சிறப்பு அதிரடி வேட்டை நடைபெற்று வருகிறது. குறிப்பாக காரைக்கால் மாவட்ட எல்லை பகுதியை  ஒட்டி அமைந்துள்ள பேரளம்,  நன்னிலம் காவல் சரக பகுதிகளில் சிறப்பு தனி படையினர் அமைத்து சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.  கடந்த மூன்று தினங்களில் மாவட்ட முழுவதும் 105 நபர்கள் கைது செய்யப்பட்டு 120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

arrest

குறிப்பாக வடுவூர் காவல் சரகம், ஓவல்குடியில்  கள்ளத்தனமாக சாராயம் தயாரித்த இரண்டு நபர்கள் மீது குண்டர்  தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரைத்துள்ளார்.  திருவாரூர் மாவட்டத்தில் இதுபோன்று சட்டவிரோத மது மற்றும் கள்ளச்சாராய விற்பனைக்கு எதிரான அதிரடி நடவடிக்கை தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.