மஞ்சுமல் பாய்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ்

 
ilaiyaraja-22 ilaiyaraja-22

குணா படத்தின் ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலை அனுமதியின்றி மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் வக்கீல் நோட்டீஸ்  அனுப்பப்பட்டுள்ளது.

ttt

மஞ்சுமல் பாய்ஸ் என்ற மலையாள படத்தில் நடிகர் கமல்ஹாசன்  நடித்த 'குணா' படத்தின் 'கண்மணி அன்போடு காதலன்' என்ற இளையராஜா இசையமைத்த பாடல் இடம் பெற்றிருந்தது. 

ff

இந்நிலையில் குணா படத்தின் ‘கண்மணி அன்போடு காதலன்' பாடலை அனுமதியின்றி மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ilaiyaraja

 முறையாக உரிமை பெற்று பாடலை பயன்படுத்த வேண்டும் அல்லது பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் எனவும், பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  தவறினால் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் நோட்டீஸில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.