‘மற்றவர்களை கவனிப்பது என் வேலையில்லை’... இளையராஜா திடீர் வீடியோ

 
எம்.பியான இளையராஜா..  மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து..

இசை பெரியதா? பாடல் பெரியதா என சமூக வலைதளங்களில் சமீபத்தில் விவாதம் எழுந்துள்ள நிலையில் மற்றவர்களை கவனிப்பது எனது வேலை இல்லை என சூசகமாக வீடியோ வெளியிட்டு இசைஞானி இளையராஜா விளக்கம் அளித்துள்ளார். 

இளையராஜா

இசைஞானி இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், “35 நாட்களில் முழுமையான ஒரு சிம்பொனி ஒன்றை எழுதியுள்ளேன். எனக்கு இது மிகவும் சந்தோஷமான விஷயம். திரைப்பட இசையோ, பின்னணி இசையின் பாதிப்போ இன்றி சுத்தமான சிம்பொனியாக இதை எழுதியுள்ளேன். என்னை பற்றி பேசப்படும் விஷயங்களில் கவனம் செலுத்துவதில்லை. மற்றவர்களை கவனிப்பது எனது வேலை இல்லை. என்னுடை வேலையை கவனிப்பதுதான் எனது வேலை. என் வழியில் நான் தெளிவாக பயணித்துக்கொண்டிருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.


சினிமா பாடலுக்கு இசை பெரிதா, மொழி பெரிதா என்ற சர்ச்சையை அண்மையில் கவிஞர் வைரமுத்து கிளப்பினார். அது சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், இரு தரப்பிற்கும் நிறைய ஆதரவு மற்றும் எதிர்ப்பு வீடியோக்கள் வெளியானது குறிப்பிடதக்கது.