என் மகள் இறந்ததால் பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை- இளையராஜா

 
இளையராஜா

இளையராஜாவின் 81-ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து ரசிகர்கள் மற்றும் திரைபிரலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

மகளை பறிகொடுத்ததால் பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை - இளையராஜா உருக்கம்

தேனி மாவட்டத்திலுள்ள பண்ணைப்புரம் என்னும் கிராமத்தில் பிறந்தவர் இளையராஜா. இசைஞானி  என அழைக்கப்படும் இவர், 1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் உருவான அன்னக்கிளி படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். 7,000 பாடல்களை எழுதி உள்ளார். 2010-ம் ஆண்டு பத்ம பூஷன் விருதையும் 2018-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருதையும் பெற்றுள்ள இளையராஜா, இன்று தனது 81-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இந்நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இசையமைப்பாளர் இளையராஜா, “என் மகள் இறந்ததால் இன்று பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை. உங்களுக்கு தான் அந்த கொண்டாட்டம். ஆனால் எனக்கு அது இல்லை" என்றார்.