"மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி"- இளையராஜா

 
s s

மத்திய அரசின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு இசையமைப்பாளர் இளையராஜா பாராட்டு தெரிவித்துள்ளார்.

ilayaraja


காஷ்மீர் பகல்ஹாம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.  கடந்த மே ஐந்தாம் தேதி மத்திய அரசு  சார்பில் அனைத்து மாநில தலைமைச் செயலாளர் சிவில் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இன்று அதிகாலை இந்திய ராணுவம் 21 தீவிரவாத முகாம்களில் கடுமையான தாக்குதல் நடத்தி பல தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது. 



இந்நிலையில் பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்த சூழலில்  மத்திய அரசின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு இசையமைப்பாளர் இளையராஜா பாராட்டு தெரிவித்துள்ளார். மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என எக்ஸ் தளத்தில் இளையராஜா பதிவிட்டுள்ளார்.