50 ஆண்டுகால இசைப் பயணம்- இளையராஜாவுக்கு ஆஸ்திரேலியாவில் கௌரவம்

 
ச்

இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப் பயணத்தை நினைவுகூரும் வகையில், ஆஸ்திரேலிய விக்டோரியா மாநில அரசின் அமைச்சர் என்வர் எர்டோகன் மற்றும் எம்.பி.க்கள் சார்பில் நினைவு தபால் தலை வெளியிடப்பட்டது.


இதுகுறித்து இளையராஜா தனது எக்ஸ் தளத்தில், “எனது  50 ஆண்டுகால இசைப் பயணத்தை நினைவுகூரும் வகையில், நினைவு தபால் தலை வெளியிட்ட ஆஸ்திரேலியா அரசுக்கும், நிதி அமைச்சரும், மாண்புமிகு என்வர் எர்டோகன் எம்.பி அவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டின் ஒரு சிறிய, தொலைதூர கிராமத்தில் பிறந்த நான், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கௌரவிக்கப்பட்டிருப்பது உண்மையிலேயே நெகிழ்ச்சியளிக்கிறது. எனது இசைக்கு உயிர் கொடுத்த மக்களுக்கும், என்னுடன் பயணித்த கலைஞர்களுக்கும், தலைமுறை தலைமுறையாக எனது இசையை வரவேற்ற ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.