நாகாலாந்து மக்கள் நாய்க்கறி சாப்பிடுபவர்கள் என ஆர்.எஸ்.பாரதி கூறியது ஏற்புடையதல்ல- இல. கணேசன்

 
பாஜக பொறுப்பை ராஜினாமா செய்தார் இல.கணேசன்

நாகாலாந்து மக்கள் நாய்க்கறி சாப்பிடுபவர்கள் எனக் கூறிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாய்க் கறி சாப்பிடுபவர்களா? ஆர்.என்.ரவி மீது நாகாலாந்து மக்களுக்கு  மரியாதை.. ஆளுநர் இல கணேசன் | Nagaland Governor Ila Ganesan condemns  R.S.Bharathi - Tamil Oneindia

நாயை சாப்பிடும் கேடு கெட்டவர்கள் நாகலாந்து மக்கள் என்று நாகலாந்து மாநில மக்கள் குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  ஆர்.எஸ். பாரதியின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, “ நாகாலாந்து மக்கள் வீரம் மிக்கவர்கள், நேர்மையானவர்கள், கௌரவமானவர்கள்.  துணிச்சல், கண்ணியம், நேர்மை மிக்க நாகாலாந்து இன மக்களை இழிவுப்படுத்தி பேசுவதை ஏற்க முடியாது. ஒட்டுமொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை புண்படுத்த வேண்டாம். நாகாலாந்து இன மக்கள் நாய்க்கறி உண்பவர்கள் என இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது. நாகாலாந்து மக்களை நாய்கறி சாப்பிடுபவர்கள் என்று திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியிருப்பது இழிவானது, அதனை ஏற்றுக்கொள்ள முடியாது, அவர்களை இழிவுபடுத்தி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை ஆர்.எஸ்.பாரதி காயப்படுத்தக்கூடாது” எனக் கூறியிருந்தார். 

இந்நிலையில், ஆர்.எஸ். பாரதிக்கு கண்டனம் தெரிவித்துள்ள நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன், “நாகாலாந்து மக்கள் அனைவரும் நாய்க்கறி சாப்பிடுபவர்கள் என ஆர்.எஸ்.பாரதி கூறியது ஏற்புடையதல்ல. நாகாலாந்து மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் இடையேயான இணக்கத்தை கெடுத்துவிடக்கூடாது. நாகலாந்தில் ஏராளமான தமிழர்கள் வாழ்கின்றனர். நாகலாந்து மக்கள் நாய்க்கறி சாப்பிடுபவர்கள் என ஆர்.எஸ்.பாரதி கூறாலாமா? நாகாலாந்து மக்களால் ஆளுநர் ஆர்.என்.ரவி விரட்டி அடிக்கப்பட்டதாக கூறுவது உண்மைக்கு மாறானது” என்றார்.