ஒருங்கிணைந்த 4 ஆண்டு B.Ed பாடப்பிரிவை அறிமுகப்படுத்த திட்டம் - சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தகவல்..

 
ஒருங்கிணைந்த 4 ஆண்டு B.Ed பாடப்பிரிவை அறிமுகப்படுத்த திட்டம் - சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தகவல்..

நாட்டில் எங்கு மிகப்பெரிய சவால் ஏற்பட்டாலும் அதில் தீர்வு காண்பதில் சென்னை ஐஐடி பங்கு வகிப்பதாக சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்தார். மேலும் பள்ளிகளில் தரமான கணித ஆசிரியர்களை உருவாக்க பி.எட் பாடப்பிரிவை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் கூறினார்.  

கல்வி நிறுவனங்களுக்கு பல்வேறு பிரிவுகளில் கீழ் மதிப்பீடு வழங்கும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் தரவரிசை பட்டியலில், ஒட்டுமொத்த தரவரிசையில் தொடர்ந்து 6 வது முறையாக இந்தாண்டும் சென்னை ஐஐடி முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும் பொறியியல் பிரிவில் என்.ஐ.ஆர்.எஃப் ரேங்கிங் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை தொடர்ந்து 9 ஆண்டுகளாக சென்னை ஐஐடி முதலிடத்தை தக்கவைத்துள்ளது. இதுகுறித்து சென்னை ஐஐடி வளாகத்தில் அதன்  இயக்குனர் காமகோடி செய்தியாளர்களை சந்தித்தார்.

 அப்போது பேசிய அவர், “நாட்டின் முதல் கல்வி நிறுவனமாக தேர்வாகியுள்ளோம். இதற்காக பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. நாட்டில் எந்த ஐ.ஐ.டிக்களும் இல்லாத வகையில் விளையாட்டு பிரிவு மாணவர்கள் 5 பேருக்கு சீட் வழங்கியுள்ளோம். பல ஆராய்ச்சி மையங்கள், புத்தொழில் நிறுவனங்களை தொடங்கியுள்ளோம். அக்னிகூல் ராக்கெட் எங்களின் மிகப்பெரிய வெற்றி. ஒவ்வொரு மாதமும் ஒரு பில்லியன் ஈட்டும் நிறுவனம் ஒன்றை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். அடுத்த 10  முதல் 15 ஆண்டுகளில் இது சாத்தியமாகும்.  

iit

முதலிடம் பெறுவது எங்களுக்கு எளிதாக இருந்தது. அதை தக்கவைப்பது தான் சவாலான பணி. அதனை செய்வோம். இந்தியாவில் உள்ள மற்ற கல்வி நிறுவனங்களும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது NIRF ஒரு ஆரோக்கியமான போட்டி, அதில் கல்வி நிறுவனங்கள் பங்கேற்பது மாணவர்களுக்கு தான் சாதகமான நிலையை உருவாக்கும். நாட்டில் எங்கு, எப்போது ஒரு கல்வி நிறுவனத்தின் தேவை ஏற்பட்டாலும் அதனை சென்னை ஐஐடி பூர்த்தி செய்யும். இந்தியாவில் பிறக்கக்கூடிய அனைத்து குழந்தைகளும் குறைந்தபட்சம் இளநிலை பட்டம் வரை படிக்க வைக்க வேண்டும் என்ற இலக்குடன் நாங்க செயல்பட்டு வருகிறோம்.

பொறியியல் படிப்பிற்கு கணித பாடமே பிரதானம். அதனால் பள்ளிகளில் நல்ல கணித ஆசிரியர்கள் கிடைத்தால் மாணவர்கள் பொறியியல் படிப்பது எளிதாகும். அதனால் ஒரு ஆண்டிற்கு குறைந்தது 500 சிறந்த கணித ஆசிரியர்களை உருவாக்கும் வகையில் B.Sc Mathematics and Computing Science படிப்பை B.Ed படிப்புடன் சேர்த்து 4 ஆண்டுகள் நடத்த திட்டமிட்டு வருகிறோம். இந்த படிப்பு இணையவழியில் நடத்தவும் B.Ed மட்டும் நேரடியான வகுப்பாகவ நடத்தவும் திட்டமிட்டு வருகிறோம்.

மாநில பல்கலைக்ழகத்திற்காக தனி தரவரிசை வேண்டும் என  கடந்த ஆண்டு கல்வி அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்தோம். அதன்படி
இந்தாண்டு வெளியிடப்பட்ட மாநில பல்கலைக்கழக தரவரிசையில் அண்ணா பல்கலைக்கழகம் முதலிடத்தை பிடித்திருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள். ஒரே சாலையில் இடது வலது புறத்தில் உள்ள இரண்டு கல்வி நிறுவனங்கள் தேசிய அளவில் முதல் இடம் பிடித்திருப்பது மிகுந்த பெருமையாக உள்ளது. 

ஒருங்கிணைந்த 4 ஆண்டு B.Ed பாடப்பிரிவை அறிமுகப்படுத்த திட்டம் - சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தகவல்..

எனது தலைமைப் பண்பில் முதல் இடம் கிடைத்தது என்பது இல்லை. சென்னை ஐ.ஐ.டி.யில் 15,000 ராஜாக்கள், அதில் ஒரு சேவகனாக  இயக்குனர் நான் செயல்படுகிறேன். தலைமைக்கு தேவை அடக்கம்; சந்திக்க வருபவர்களை புண்சிரிப்புடன் வரவேற்க வேண்டும். என்ன செய்ய வேண்டுமென கேட்க வேண்டும். அப்படி தான் செய்கிறேன். உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். அதற்காக அனைவருக்கும் கல்வி செல்வம் அவசியம் என்பதை உணர்த்தும் வகையில் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு கல்வி மீது ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறோம். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மாணவர்கள் மகிழ்ச்சியாக கல்வி கற்பதற்கு தேவையான அனைத்து சூழ்நிலையும் உருவாக்கி உள்ளோம்.  மாணவர்களுக்கு கவுன்சிலிங், அறிமுக நிகழ்ச்சி, இன்டக்ஷன் ப்ரோக்ராம், உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். 

மாணவர்கள் பல முறைகளில் தங்களது குறைகளை தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். புகார் பெட்டி, குறிப்பிட்ட காலத்தில் தீர்வு செய்ய வழிவகை, இணையதளத்தில் தெரிவிக்க வசதி, இவைமட்டுமல்லாது  மாணவர்களின் பெற்றோரிடம் தொடர்பு கொண்டு வாரத்தில் இரண்டு முறையாவது உங்களது பிள்ளைகளுடன் பேசினீர்களா, மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என கேட்டும் தெரிந்து கொள்கின்றோம். நல்ல திறமையானவர்கள் பலர்  விளையாட்டில் ஆர்வம் காட்டுவதில்லை. அதில் எதிர்காலம் இல்லை என நினைக்கிறார்கள்; அதனால் தான் ஒலிம்பிக் போன்ற போட்டியில் இந்தியாவிற்கு குறைவான பதக்கங்கள் கிடைக்கிறது.

இதனை மாற்றவே தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று குறைந்த பட்சம் நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு ஐஐடி-யில் கல்வி பயிலும் வாய்ப்பை வழங்குகிறோம். நன்றாக விளையாடினால் நமக்கு எதிர்காலத்தில் வாய்ப்பு உள்ளது என்ற நிலையை உருவாக்கினால் நிறைய பேர் விளையாட தொடங்குவார்கள்.” என்று தெரிவித்தார்.