'ஹெல்மெட் அணிந்து சென்றால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்'- விஜய்காந்த் வேடத்தில் வந்து சர்ப்ரைஸ்
Dec 27, 2024, 19:10 IST1735306840000
தஞ்சையில் கேப்டன் விஜயகாந்த் நினைவு நாளை ஒட்டி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 'ஹெல்மெட் அணிந்து சென்றால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்' என விஜயகாந்த் வேடத்திலேயே அறிவிக்கப்பட்டதால் மக்கள் பெட்ரோல் பங்கில் ஆர்வத்துடன் கூடினர்.
நடிகர் விஜயகாந்த் நினைவுநாளை முன்னிட்டு தஞ்சையில் விஜயகாந்த் போன்றே தோற்றமளிக்கும் விஜயகாந்த கணேஷ் என்ற நடிகரை வைத்து பொதுமக்கள் கலந்து கொண்ட ஹெல்மெட் விழிப்புணர்வு வாகன பேரணி இன்று நடைபெற்றது. தொண்டு நிறுவனம் ஏற்பாட்டில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து ஆண்களும், பெண்களும் இந்த பேரணியில் கலந்துகொண்டனர். பேரணியின் முடிவில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு புத்தாண்டை முன்னிட்டு கேக் மற்றும் 1 லிட்டர் பெட்ரோலும் இலவசமாக வழங்கப்பட்டது.