விஜய் குறித்து பேசினால் நடவடிக்கை, சீமானை பற்றி பேசினால் நடவடிக்கை இல்லையா?- நீதிமன்றம் கேள்வி
முதல்வர் விஜய் குறித்து பேசினால் நடவடிக்கை, சீமானை பற்றி பேசினால் நடவடிக்கை இல்லையா? என மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தீரன் திருமுருகன் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசிய திமுக எம்எல்ஏவை உடனே வழக்கு பதிந்து காவல்துறை கைது செய்தது. ஆனால் சீமான் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை? ஒரு தலைவர் குறித்து அவதூறாகவோ அல்லது அசிங்கமாகவோ பேசுவதை வேடிக்கை பார்க்க முடியாது, தமிழகத்திற்கு சீமான் ஒரு தவிர்க்க முடியாத தலைவர். CM குறித்து பேசிய திமுக எம்.எல்.ஏ மீது உடனடியாக வழக்குப்பதிவு. சீமான் விவகாரத்தில் ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை? தமிழக காவல்துறை ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என சாடியது.
மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை இன்றைக்குள் அகற்றி, வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை மாவட்ட சைபர் கிரைம் ஆய்வாளருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் யூடூயூபர்கள் பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் மீது இன்று உடனடியாக வழக்கு பதிந்து நாளை அறிக்கை தர நீதிபதி விக்டோரியா கவுரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

