இனி இந்த சான்றிதழ் இல்லையென்றால் பெட்ரோல் கிடையாது..!

 
1 1

டெல்லியில் காற்று மாசு அபாயகரமான அளவை எட்டி வரும் நிலையில் நாளுக்குநாள் காற்றின் தரக் குறியீடு (AQI) மிக மோசமான அளவை காட்டி வருகிறது. இந்நிலையில் டெல்லியில் மாசு அளவை கட்டுக்குள் கொண்டு வர, அந்த மாநில அரசு புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. இதற்காக, ‘NO PUCC, No Fuel’ என்ற பரப்புரையை முன்னெடுத்து வருகிறது. அதாவது டெல்லியில் வாகனம் ஓட்டுவோர் கட்டாயம் மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழை வைத்திருக்க வேண்டும். இந்த சான்றிதழைக் காட்டினால் மட்டுமே எரிபொருள் நிரப்ப முடியும்.

PUC என அழைக்கப்படும் மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே எரிபொருள் நிரப்ப வேண்டும் என்று டெல்லி அரசு உத்தரவிட்டிருப்பதைத் தொடர்ந்து, சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதை பெட்ரோல் பங்க்குகள் நிறுத்தியுள்ளன.