நீங்கள் ரோசப்பட்டு கட்சியை கலைத்து விட்டால் யார் எங்களுக்கு கதை சொல்லுவாங்க – சீமானை கலாய்த்த வினோஜ் பி செல்வம் !

 
1

தென்மாநிலங்களில் பாஜக மிகப்பெரிய சக்தியாக வரும் என்று அண்ணாமலை கூறுவது குறித்து சீமானிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, “ஜூன் 4 -ம் தேதிக்கு பிறகு பாஜக பெறப்போகும் வாக்குகள் எவ்வளவு என்று தெரிந்து விடும்.கூட்டணி இல்லாமல் தனித்த பாஜகவின் வாக்குகள் நாம் தமிழர் கட்சியை விட அதிகமாக இருந்தால் கட்சியை கலைத்துவிடுகிறேன்” என்றார்.

சீமான் பேசிய கருத்துக்கு பதிலடி தரும் விதமாக மத்திய சென்னை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், பாஜக போட்டியிட்ட தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியை காட்டிலும் அதிக வாக்குகள் பெற்றுவிட்டால் கட்சியை கலைத்து விடுவதாக வாய்ச்சவடால் விட்டிருக்கும் அண்ணன் சீமான் அவர்களுக்கு வேண்டுகோள்.

நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழப்பதையும், பாஜக பல தொகுதிகளில் வெற்றி பெறுவதையும் உங்கள் கண் முன்னால் பார்க்க இருக்கிறீர்கள்.

ஆனால், அதற்கெல்லாம் ரோசப்பட்டு கட்சியை கலைத்து விட வேண்டாம். தமிழக அரசியல் களத்தில் நகைச்சுவை உணர்வு, கதை சொல்லும் பண்பு போன்றவை காணாமல் போய்விடும். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.