கேள்வி கேட்டால்... சேனல் நீக்கமா? அரசு கேபிளிலிருந்து நீக்கப்பட்டது.ஏன்..? தமிழக பாஜக தலைவர்கள் சரமாரி கேள்வி..!
பா.ஜ.க. தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்திலிருந்து பாலிமர் நியூஸ், நியூஸ் தமிழ்,மற்றும் தமிழ் ஜனம் நியூஸ் ஆகிய சேனல்கள் ஒளிபரப்பு தடை செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. கடந்த வாரம் புதிய தலைமுறை தற்போது இந்த சேனல்கள் என ஊடகங்களையே சந்திக்காத முதல்வர் விஜயின் அரசின், தமிழ்நாடு கேபிள் டிவி நிர்வாகம் செயல்படுவது ஊடக தர்மத்திற்கு எதிரானதும், கருத்து சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை போடும் செயலும் ஆகும்.
ஆளுங்கட்சியின் நல்ல திட்டங்களையும், அதே சமயத்தில் தவறுகளையும் சுட்டிக்காட்டி நடுநிலையோடு செயல்படும் ஊடகங்கள் மீதான தவெக அரசின் இது போன்ற செயல்கள் அற்பத்தனமானது. இனியும் இது போன்ற செயல்களில் ஈடுபடாமல் ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்களை சுதந்திரமாக செயல்பட வைக்க தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்திலிருந்து @polimernews @NewsTamilTV24x7 @TamilJanamNews ஆகிய சேனல்கள் ஒளிபரப்பு தடை செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. கடந்த வாரம் புதிய தலைமுறை தற்போது இந்த சேனல்கள் என ஊடகங்களையே சந்திக்காத முதல்வர் @CMOTamilnadu…
— Vanathi Srinivasan (@VanathiBJP) June 9, 2026
அதே போல் பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், திரையில் ஊழலுக்கு எதிராக கத்தி எடுத்த முதலமைச்சர் திரு.விஜய் நிஜத்தில் கேள்விகளைக் கண்டு ஓடி ஒளிவது ஏன்? த.வெ.க அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டும் தமிழ் ஜனம் நியூஸ், பாலிமர் நியூஸ், நியூஸ் தமிழ் 24x7 ஆகிய 3 ஊடகங்களை அரசு கேபிளில் இருந்து நீக்கியிருப்பது வெட்கக்கேடு.
சர்வாதிகாரப் போக்கில் ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கும் உங்கள் மெர்சல் வித்தைகள் ஜனநாயகத்தில் செல்லுபடியாகாது. கருத்துச் சுதந்திரத்தின் மீதான இந்தத் தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இருட்டடிப்பு செய்யப்பட்ட இந்த 3 ஊடகங்களையும் உடனடியாக அரசு கேபிளில் மீண்டும் ஒளிபரப்ப வேண்டும்.
விமர்சனங்களை எதிர்கொள்ளத் துணிவில்லாத நீங்கள் எப்படி மக்கள் சர்கார் நடத்த முடியும்? என பதிவிட்டுள்ளார்.
திரையில் ஊழலுக்கு எதிராக கத்தி எடுத்த முதலமைச்சர் திரு.@TVKVijayHQ நிஜத்தில் கேள்விகளைக் கண்டு ஓடி ஒளிவது ஏன்? த.வெ.க அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டும் @TamilJanamNews, @polimernews , @NewsTamilTV24x7 ஆகிய 3 ஊடகங்களை அரசு கேபிளில் இருந்து நீக்கியிருப்பது வெட்கக்கேடு.… pic.twitter.com/5VZCrNqRR9
— Dr.SG Suryah (@SuryahSG) June 9, 2026

