நாங்கள் ஒரு கேள்வி கேட்டால் நாங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு பதிலை சொல்கிறார்கள் - உதயநிதி பேச்சு..!

 
1

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசியதாவது 

நேற்று முன்தினம் முதலமைச்சர் பேசியபோது, அவருடைய மேஜையில் ஃபைல்ஸ் இருப்பதாக எங்களது அரசை குற்றசாட்டும் நோக்கில் பேசியுள்ளார். தயவுசெய்து அந்த ஃபைல்ஸை திறந்து பார்க்க வேண்டும். அவர் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். எதற்காக பயப்படுகிறீர்கள் என்ற வசனத்தை கூறியிருக்கிறார்.

நாங்கள் ஒரு கேள்வி கேட்டால் நாங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு பதிலை சொல்கிறார்கள். சட்டமன்ற நிகழ்வுகள் முதன்முதலில் நேரலை செய்யப்பட்டது திமுக ஆட்சியில்தான். கேள்வி - பதில் நேரத்தை முதன்முதலில் நேரலை செய்ததும் நாங்கள்தான். ஆனால் கேள்வி - பதில் விவாதமே நடத்த முடியாத சூழல்தான் தற்போது உள்ளது.

அனைத்தையும் நேரலை செய்து வருகிறீர்கள். அனைத்தையும் நேரலை செய்வதால் என்ன பிரச்சினை வருகிறது என்று நாங்கள் கூறி வருகிறோம். அவைக்குறிப்பில் இருந்து ஒரு வார்த்தை நீக்கப்படுவதற்கு முன்பாகவே அது நேரலையில் சென்றுவிடுகிறது. சபாநாயகர் அவைக்குறிப்பில் நீக்கும் வார்த்தையை முழுமையாக நீக்கவேண்டும்” என்றார்.

உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த சட்டமன்ற நேரலை பேச்சுக்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,முதன்முறையாக தமிழ்நாடு வரலாற்றில், முதலமைச்சர் தைரியமாக நேரலை ஒளிபரப்புக்கு அனுமதி கொடுத்திருக்கிறார். 2021 திமுக தேர்தல் அறிக்கையில் சட்டமன்றத்தை நேரலையில் ஒளிபரப்பு செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு ஏன் செய்யவில்லை? என்றும் கேள்வி எழுப்பினார்.