அமைச்சர் பெருமக்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி என்ன..? ஸ்டாலின் விமர்சனம்..!

 
MK Stalin

முதல்வர் விஜய் தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, சந்தித்து வரும் மிகப்பெரிய பிரச்னைகளில் இந்த மின்வெட்டும் ஒன்று. சென்னை, செங்கல்பட்டு உள்பட பல்வேறு மாவட்டங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.

இதனால், பொதுமக்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரச்னையை சரி செய்ய உத்தரவிட்ட முதல்வர் விஜய், அண்மையில் மின்வாரிய அலுவலகத்தில் நேரில் ஆய்வு செய்தார். மேலும், மின்வெட்டு விவகாரத்தில் தவெக அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் உள்ளிட்ட அமைச்சர்களும் பல்வேறு விளக்கங்களை கொடுத்து வருகின்றனர்.

இந்த சூழலில், அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளிலும் மின்வெட்டு இடையூறு ஏற்படுத்தியது. இன்று மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் அமைச்சர்கள் அருண் ராஜ், செங்கோட்டையன் ஆகியோர் பங்கேற்ற வெவ்வேறு நிகழ்ச்சிகளும் மின்வெட்டால் பாதிக்கப்பட்டன.இந்த சம்பவங்களை சுட்டிக்காட்டி,

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான ஸ்டாலின், தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.அவர் விடுத்துள்ள பதிவில்; 'தவெக ஆட்சியில் அமைச்சர் பெருமக்களுக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் கதி என்ன என்பதைச் சொல்லவே தேவையில்லை. இரண்டு நாட்களுக்கு முன், மின்வாரியத் தலைமையகத்தில் முதல்வர் Review செய்யவில்லை. Reels-தான் எடுத்துவிட்டு வந்திருக்கிறார் போல,' எனக் குறிப்பிட்டுள்ளார்.