" வாக்கு குறைந்தால் பொறுப்பானவர் பதில் சொல்ல வேண்டும்" - முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை!!

 
tn

வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் அரவணைத்து அழைத்து சென்று வாக்கு சேகரிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

tn

திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் அறிக்கை வெளியீட்டுக்கு  பிறகு மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், எந்த இடத்தில் வாக்கு குறைந்தாலும் பொறுப்பானவர் பதில் சொல்ல வேண்டும். கூடுதல் வாக்கு பெறும் பொறுப்பு மாவட்ட பொறுப்பு அமைச்சர்களையும் ,  மாவட்டச் செயலாளர்களையும் சாரும்.  ஒரு எம்எல்ஏ தொகுதியில் வாக்கு குறைந்தாலும் மாவட்ட செயலாளரும் பொறுப்பு அமைச்சருமே பொறுப்பு. வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் அரவணைத்து அழைத்து சென்று வாக்கு சேகரிக்க வேண்டும்.

tn

திமுக கூட்டணிக்கட்சியினர் தோளோடு தோளாக நீண்டகாலமா கொள்கை உணர்வுடன் பயணிக்கிறார்கள்; தனிப்பட்ட விருப்பு வெறுப்பைத் தாண்டி கட்சியோட நலன் முக்கியம்;  தமிழ்நாட்டோட நலன் முக்கியம் என்று வெற்றியை நோக்கி வேலை பார்க்க வேண்டும்; அனைத்து தொகுதிகளிலும் ஸ்டாலின்தான் வேட்பாளர் என்ற எண்ணம்தான் எல்லோரிடமும் இருக்க வேண்டும்.  இந்தியா கூட்டணி பெறப்போகும் வெற்றி சமூகநீதிக்கும் மதச்சார்பின்மைக்கும் எதிரான கருத்தியல்களை விதைக்கலாம் என்ற எண்ணம் பாஜகவுக்கு கனவிலும் வரக்கூடாது; புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் நாம் தான் வெற்றி பெற போகிறோம் என்பது உறுதி; ஜூன் 4-ம் தேதி வெற்றிச் செய்தியோட வந்து என்னைச் சந்தியுங்கள் என்றார்.