முத்துராமலிங்கத் தேவர் உயிருடன் இருந்திருந்தால் பாஜகவிற்கு ஆதரவு கிடைத்திருக்கும் - தமிழிசை..!

 
1 1

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் 118வது பிறந்த நாள் மற்றும் குருபூஜை விழா இரு தினங்களுக்கு முன் யாகசாலை பூஜைகளுடன் ஆன்மிக விழாவாக தொடங்கியது.

இதனை தொடர்ந்து, முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாள் மற்றும் குரு பூஜை, அரசு விழாவாக நடைபெற்று வரும் நிலையில், பசும்பொன் நினைவிடத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதனை அடுத்து, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

சற்றுமுன் முன்னாள் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "திமுகவை தோற்கடிப்பதில் எல்லோருக்கும் பங்கு உள்ளது, விஜய்க்கும் பங்கு உள்ளது. முத்துராமலிங்கத் தேவர் உயிருடன் இருந்திருந்தால் பாஜகவிற்கு ஆதரவு கிடைத்திருக்கும்" என கூறினார்.