கோவில்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை என்றால் அறநிலையத் துறை எதற்கு?

 
Annamalai

கோவில்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை என்றால் இந்து சமய அறநிலையத் துறை எதற்கு, அமைச்சர் எதற்கு? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் லிங்கேஸ்வரர் கோயிலில் 63 நாயன்மார்கள் உள்ள கோபுரங்களின் கலசம் உடைக்கப்பட்டும், அவிநாசிலிங்கேஸ்வரர் மீது இருந்த துணிகள் களைந்தும் இருந்துள்ளன. இதுகுறித்து கோயில் நிர்வாகம் காவல்துறைக்கு புகார் தெரிவித்த நிலையில் போலீசார் சோவிலுக்குள் சோதனை செய்துள்ளனர். இதில்   இரண்டு வேல்கள் மற்றும் உபகாரப் பொருட்கள் காணவில்லை என்பது தெரியவந்தது. இதன் பின்னர் நடந்த தொடர் சோதனையில் , பெரிய கோபுரம் நிலை பகுதியில் ஒருவன் ஒளிந்திருப்பது தெரியவந்ததையடுத்து அவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.  அந்த நபரிடம் இருந்து வேல், சேவல் கொடி ,  உபகாரப் பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.  பின்னர் போலீசார் அவரை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

tn
இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், "நேற்று நள்ளிரவு, திருப்பூர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலுக்குள் சமூக விரோதிகள் புகுந்து, சாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தபின், கோவில்கள் தாக்கப்படுவதும், மக்களின் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதும் தொடர்கிறது. ஆனால், உண்மையான குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படுவதாகத் தெரியவில்லை. கைது செய்யப்படுபவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறி குற்றத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியே தொடர்வதாகத் தெரிகிறது. 

Annamalai

கோவில்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை என்றால் இந்து சமய அறநிலையத் துறை எதற்கு, அமைச்சர் எதற்கு? உடனடியாக, உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காவல்துறையை வலியுறுத்துகிறேன். மக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. இனியும் இது போல கோவில்கள் தாக்கப்படுவது தொடர்ந்தால், அதன் எதிர்விளைவுகளுக்கு திமுக அரசே பொறுப்பு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று பதிவிட்டுள்ளார்.